திருச்செந்தூர் மாவட்டம், தோப்பூர் அருகே பள்ளி மாணவர் ஒருவர் திடீரென வெடித்த வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்தார் அவர் சிகிச்சகைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோப்பூரில் உள்ள பள்ளியின் வளாகத்தில் சிறுவன் ஒருவர் விளையாடி கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அந்த பள்ளி வளாகத்தில் பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இந்த சத்தத்தால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் அந்த இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார் இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து முதலுதவி செய்யப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டிருந்தார். காயத்தின் தீவிரம் காரணமாக மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை ராசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் மோசமான நிலையிலேயே இருந்தது, இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் உறவினர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடலை வாங்க மறுப்பு தெரிவித்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.