ஆப்பிரிக்கா நாட்டின் உகாண்டாவில் ஒரு பகுதியில் வசிக்கும் இரண்டு வயது சிறுவனை நீர்யானை ஒன்று முழுங்கியுள்ளது அந்த சிறுவனை பாதி முழுங்கிய பின் தரையில் துப்பியுள்ளது சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்தான விசாரணையில் அந்த நாட்டின் பொலிஸார் கூறுகையில், உகாண்டா நாட்டில் உள்ள நீர்நிலை கரையோரம் இகா பால் என்ற இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது அங்கிருந்த நீர்யானை ஒன்று அந்த சிறுவனை அப்படியே முழுங்க முயற்சித்துள்ளது. சிறுவனின் தலை பகுதியில் இருந்து பாதி முழுங்கிய நிலையில் கிரிஸ்பாஸ் பகோன்ஸா என்ற ஒருவர் அந்த நீர்யானை மீது கற்களை வீசியுள்ளார் இதனால் பயந்து அந்த சிறுவனை தரையில் துப்பிவிட்டு சென்றது.
இதன் மூலம் அந்த சிறுவன் நீர்யானையின் வாயிலிருந்து உயிருடன் மீண்டுள்ளான். சிறு சிறு காயங்களுடன் மீண்ட அந்த சிறுவனை உடனடியாக மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.என்று காவல் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிபிசியின் ஆய்வின் படி, உலகின் மிகக் கொடிய பெரிய நிலப் பாலூட்டியான நீர்யானைகளால் ஆப்பிரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேர் உயிரிழக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது