விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… கடித்து குதறிய ராக் பில்லர் வகை நாய்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடப்பாளையத்தில் வசித்து வருபவர் மந்திரகிரி இவருக்கு விஷால் அபிமன் என்ற நான்கு வயது மகன் உள்ளார்.
மந்திரகிரியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிரஞ்சோதி என்பவர் வளர்க்க தடை செய்யப்பட்ட ராக் பில்லர் என்னும் இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து நேற்று முன்தினம் சிறுவன் விஷால் அபிமன் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிரஞ்சோதி தனது வளர்ப்பு நாயை வெளியே விளையாடுவதற்காக கொண்டுவந்துள்ளார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது நாய் பாய்ந்தது. இதனால் அவனுக்கு காயங்கள் ஏற்பட்டது.
இதற்குள் உரிமையாளர் நாயின் சங்கிலியைப் பிடித்து, இழுத்து நிறுத்தி விட்டதால், சிறு காயங்களுடன் சிறுவன் தப்பினான்.
சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அவனது பெற்றோர், அவனுக்கு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவனை கடித்த அந்த நாய் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டது என்பதால் நாயை வளர்த்து வந்த உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்