தாமரை பூவை பறிக்க சென்ற சிறுவன்.. இறுதியில் நிகழ்ந்த சோகம்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும் கஷ்வா் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த குளத்தில் தாமரை பூவை பறிக்க சென்றுள்ளது.
சேற்றில் இருந்த தாமரை கொடிகளில் சிறுவனின் கால்கள் சிக்கியதால் குளத்து நீரில் மூழ்கியுள்ளான்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு கதறி அழுத சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி வீட்டிற்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
-பவானி கார்த்திக்