மூளைச்சாவு அடைந்த பள்ளி சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பள்ளி சிறுவனின் உடல் உறுப்புகளை உறவினர்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த அருள் – பரிமளா ஆகிய தம்பதியர்களின் இரண்டாவது மகன் ராகவேந்திரா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ராகவேந்திரா கடந்த 18 ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்து, ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் ராகவேந்திரானுக்கு மூளை சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, மூளைச்சாவடைந்த சிறுவனின் உறுப்புகளை தானமான வழங்க அவரது உறவினர்கள் முடிவெடுத்ததை தொடர்ந்து, சிறுவனின் இருதயம், கல்லீரல், சிறுநீரம், ஆகிய உறுப்புகளை தானமாக வழங்கினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.