ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!!
ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருகின்றனர்.
இதனிடையே அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து செய்கின்றனர். அதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் 14 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்த 37 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..