சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி செய்த கொடுமை..! ஐகோர்ட்டில் பெண் அதிரடி செயல்..!
கோவையில் பிறந்த ரம்யா (பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது) சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் சென்னையில் இங்கு உறவினர் வீட்டில் தங்கி பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்..,
இவருக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்., அப்படி ஒருநாள் கோவிலுக்கு செல்லும் போது அங்கிருந்த பூசாரி ஒருவர் உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என கேட்டுள்ளார்.
அதற்கு ரம்யாவும், நான் டிவி சேனலில் வேலை பார்ப்பதால் என்னை டிவியில் பார்த்து இருப்பீர்கள் என பதில் அளித்துள்ளார். பின் கோயில் பூசாரியான கார்த்திக் ரம்யாவை சாமி கோவில் கருவறைக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளார். பின் ரம்யாவிடம் பேசி குருக்கள் கார்த்திக் போன் நம்பர் வாங்கியுள்ளார்.
பிறகு ரம்யாவின் போனுக்கு அடிக்கடி கோயில் நிகழ்ச்சிகள் பற்றி அனுப்புவது, சொற்பொழிவு அனுப்புவது பற்றி இருவரும் பேசி வந்துள்ளனர்.
இப்படி நாள் போக ஒருநாள் கோவிலுக்கு வந்த ரம்யாவிடம், நான் உங்கள் வீட்டின் வழியாக தான் செல்கிறேன், உங்களை அங்கே விட்டு செல்கிறேன் என கூறியுள்ளார். பின் இருவரும் காரில் சென்றுள்ளனர். வீடு வந்ததும் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் அப்படியே வீட்டுக்குள் வந்து ஒரு காபி சாப்பிட சொல்லக்கூடாத என கேட்டுள்ளார் கார்த்திக்.
ரம்யாவும் சரி வீட்டிற்குள் வாங்க என அழைத்துள்ளார். வீட்டிற்குள் வந்த பூசாரி கார்த்திக், ரம்யாவிடம் தீர்த்தம் ஒன்றை கொடுத்து இது அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் என கொடுத்துள்ளார்.. அதை ரம்யா கொடுத்ததும் சிறிது நொடிகளிலேயே மயங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து ரம்யா கண் விழித்து பார்த்த போது உடம்பில் ஆடையில்லாமல் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது பற்றி கார்த்திக்கிடம் கால் செய்து கேட்டபோது மீண்டும் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
உன் அழகில் மயங்கி, உன்னுடன் வாழ ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டேன், இருவரும் தனிமையில் இருந்துவிட்டோம் எனக்கு திருமணம் ஆகி விட்டது ஆனால் என் மனைவியிடம் இருந்து எனக்கு எந்த உடல் சுகமும் கிடைக்கவில்லை எனவே தான் நான் இப்படி நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுமா என கூறி காலில் விழுந்துள்ளார் பூசாரி கார்த்திக்.
ரம்யாவும் பெற்றோரை இழந்து பல ஆண்டுகளாக தனிமையில் இருந்ததால் வேறு வழியின்றி கார்த்திக் உடன் வாழ ஒப்புக்கொண்டுள்ளார்.., பின் அடிக்கடி ரம்யாவின் வீட்டிற்கு வந்த கார்த்திக் அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் அவர் கற்பமாகியுள்ளார்.
ஆனால் கார்த்திக் இந்த குழந்தை பிறந்தாள் நாம் பிரிந்துவிடுவோம் நம் ஜாதகபடி இந்த குழந்தை நமக்கு தேவையில்லை என கூறி வற்புறுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்துள்ளார்.
பிறகு ஒரு நாள் ரம்யாவை வீட்டில் வைத்தே கார்த்திக் திருமணம் செய்துள்ளார்.., சில நாட்கள் கழித்து கார்த்திக் அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்து ரம்யாவிடம் பேசிக்கொண்டு இரு எனக்கு வெளியில் சிறு வேலை ஒன்று உள்ளது என கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதன் பின் அவரது நண்பர் கெளதம், ரம்யாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார், அதிர்ச்சி அடைந்த ரம்யா இது பற்றி கார்த்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் இது வெளியில் தெரிந்த அவமானம் எனவே இதை அப்படியே விற்றுவிடு நான் நாளை வந்து பேசுகிறேன் என கூறி சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் மறுநாள் ரம்யாவிடம் நீ கொஞ்ச நேரம் கெளதம்வுடன் அட்ஐஸ்மென்ட் பண்ணியிருந்த நிறைய பணம் கிடைச்சு இருக்கும்.., என் ஆசையெல்லாம் கெடுத்தது நீ தான் என கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இப்படி பட்ட ஒரு சூழலில் கார்த்திக்கின் செல்போனை ரம்யா எடுத்து பார்த்தபோதே கார்த்திக்கின் உண்மை முகம் அவருக்கு தெரிய வந்துள்ளது. ரம்யாவை மட்டுமின்றி பல பெண்களிடம் அவர் உல்லாசமாக இருந்ததும்.
ரம்யாவை அந்தரங்கமாக போட்டோ எடுத்து பலருக்கும் அனுப்பிவைத்தது தெரியவந்தது பின், இதுபற்றி கார்த்திக்கிடம் விசாரித்த போது ரம்யாவை தாக்கிவிட்டு செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த ரம்யா கார்த்திக் பூசாரியாக உள்ள கோயிலுக்கு சென்று, மற்றொரு குருக்களான காளிதாஸ் என்பவரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சொல்லி முறையிட்டுள்ளார்..
அதற்கு அவர், “கார்த்திக் என்னுடைய அண்ணன் மகன் தான். நீ அவனுடன் இருந்ததற்கு 10லட்சம் போதுமா இல்லை இன்னும் வேண்டுமா என கேட்டுள்ளார்.
இதனால் மனம் உடைந்த ரம்யா, கார்த்திக்கின் கள்ளக்காதலியின் சுவேதா என்பவரை சந்தித்து நடந்ததை பற்றி கூறியுள்ளார்., அதற்கு சுவேதா என்னுடன் வா இது மாதிரி பல பேரை தெரியும் நல்லா பணம் சம்பாதிக்கலாம் என பேசி பாலியல் தொழிலில் ஈடுபட முயற்சித்துள்ளார்.
அதன் பின் கார்த்திக்கின் மனைவி பிரியாவை சந்தித்து பேசிய போது, என் கணவர் அப்படிதான் இது பற்றி நீ வெளியில் சொன்னால் உன்னை அடியோடு அழித்துவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.. இதனால் பயந்து போன ரம்யா விருகம்பாக்கம் உரிய ஆவணங்களுடன் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் :
மேலும் கார்த்திக் முனுசாமி வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாலை கிராமத்தைச் சேர்ந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது, கார்த்திக் மீது புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கார்த்திக் மீது காவல்துறையினர் கைது செய்யவோ, அவரிடம் விசாரணை நடத்தவோ இல்லை எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றம் செய்தவருக்கு தண்டனை கொடுக்குமாறு அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ