திருப்பத்தூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பிஏபி வாய்க்கால் பகுதியில் கல்லூரி மாணவிகளான லீனா மற்றும் பிரீத்தா ஆகியோர் அவர்களது நண்பரான சந்தோஷ் என்பவருடன் சேர்ந்து வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது வாய்கால் பகுதியில் யாரும் இல்லாததால் அடித்து சென்ற போது அந்த சமயம் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை..,
நீண்ட நேரம் ஆகியும் லீனா மற்றும் பிரீத்தா வீட்டிற்கு வரவில்லை என்றதால் அவர்களின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவிநாசி பாளையம் போலீசார் வாய்க்காலில் தவறி விழுந்த மூவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
பல மணி நேர தேடுதலுக்கு பின் வாய்க்காலில் இறந்த நிலையில் மிதந்து வந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவினாசி பாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பிஏபி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.