இறுதி கட்டத்தை நெருங்கிய காவிரி பிரச்சனை..!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொலி வழியாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீா் கோட்டத் தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பிற 3 மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.
இதில், கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு 15 நாள்கள் தமிழகத்திற்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது.
இறுதியாக, நவம்பா் 1 முதல் 23- ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..