டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தீவிரம் காட்டும் சிபிசிஐடி!

6 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ள ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை சிபிசிஐடி காவல்துறையினர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிசிஐடி டிஎஸ்பி சிவானு பாண்டியன் தலைமையில் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் சென்று குரூப்-2 ஏ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனின் 6 நாள் போலீஸ் காவல் முடிந்தவுடன் இருவரையும் வரும் திங்கள்கிழமை 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்..அதேபோன்று குரூப்-4 விவகாரம் தொடர்பாக ஆலந்தூர், ஜார்ஜ்டவுன், எழும்பூர் நீதிமன்றங்களில் சரண் அடைந்த கார்த்திகேயன், சம்பத், செல்வேந்திரன், அப்பு என்ற பிரபாகரன் ஆகிய 4 பேரையும் நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மூன்றாவது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விசாரணையில் ஜெயக்குமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்நிலையில் கார்த்திகேயன், சம்பத், செல்வேந்திரன் மற்றும் அப்பு என்ற பிரபாகரன் ஆகிய நான்கு பேரரையும் நான்கு நாள் போலீஸ் காவல் முடிந்து  வரும் திங்கட்கிழமை 24ஆம் தேதி மதியம் 1  மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

What do you think?

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!