February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா விளையாட்டு

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு

சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய குடிமக்கள் ஆக உள்ள விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு, உலக கோப்பை, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றவர்களுக்கு 30 வயது நிறைவடைந்தவுடன் அல்லது விளையாட்டில் இருந்து முற்றிலும் ஒய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கான ‘பண்டிட் தீண்டயல் உபாத்யாய் தேசிய நல நிதியம்’ திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து விளையாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்..இந்த திட்டமானது ஏழ்மையில் வாழும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கும், நோயால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வரும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் ஊனமுற்ற மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் சமமாக பொருந்தும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

Related posts

3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து – டிரம்ப்

superadmin

‘காந்தி நடத்திய நாடகம்’ – பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சால் மக்களவை ஒத்திவைப்பு!

superadmin

நடிகர் விஜய்யிடம் பறிமுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு !

superadmin

குடியரசு நாள் அணிவகுப்பில் சில மாநில அரசுகளின் ஊர்திகளுக்கு இடம் தராதது ஏன்? – வைகோ கேள்வி

Digital Team

டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

superadmin

ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை – காங்கிரஸ்

superadmin
You cannot copy content of this page
Madhimugam