ரத்தன் டாடா காலமானார்..!
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா அவர்கள் மும்பையில் மருத்துவமனையில் புதன்கிழமை அன்று காலமானார்.
ரத்தன் டாடா முதுமை முதிர்ச்சி காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகளால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சென்ற திங்கள்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் உடலி நிலை சீராக இல்லை என்பதால் புதன்கிழமை இரவு அன்று அவரின் உயிர் பிரிந்துள்ளது என டாடா சன்ஸ் தலைவரான என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
1991 முதல் 2012 வரை அவர் டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்து டாடா நிறுவனத்தின் புகழை உலகம் முழுவதும் தெரியப்படுத்தினார்.
மத்திய அரசானது 2000 ல் அவருக்கு பத்ம பூஷண் விருதையும், 2008 ல் பத்ம விபூஷண் விருதையும் அளித்து கெளவரப்படுத்தியது.
ரத்தன் டாடா அவர்கள் உலகில் பெரும்பாலான நாடுகளில் 30க்கும் அதிகமான நிறுவனங்களை அவர் நிர்வகித்து வந்தார். இவர் உலகின் முன்னணி கோட்டீஸ்வராக இருந்தபோதும் ஒருபோதும் கோட்டீஸ்வர்களின் பட்டியலில் அவர் வந்ததே இல்லை இதற்கு காரணம் டாடா நிறுவனத்தின் 66% லாபமானது அறக்கட்டளைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலமாக கல்வி, வாழ்வாதாரம், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவர் 1996-ல் டாடா தொலைத்தொடர்பு சேவையும், 2004-ல் டாடா கன்சல்டென்ஸி நிறுவனத்தையும் உருவாக்கி இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
இவர் 2009-ல் நடுத்தர மக்களுக்காக ரூ.1 லட்சத்தில் டாடா நேனோ கார் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
ரத்தன் டாடா மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர் அம்பானி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.