கார்ப்பரேட்டுகளை வழுப்படுத்தும் மத்திய அரசு..!! மக்களுக்காக செயல்பாடாத நிர்மலா சீதாராமன்..!! பழனியப்பன் விமர்சனம்..!!
கார்ப்பரேட்டுகளை வழுப்படும்தும் அரசாக மத்திய அரசு செயல் படுத்துவருகிறது ஜாதி மதம் பேதமின்றி இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி திருப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கர்நாடக மாநில பொறுப்பாளர் கோபிநாத் பழனியப்பன் பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும் கர்நாடக மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கோபிநாத் பழனியப்பன் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவினாசி சாலை திருமுருகன்பூண்டி அருகே உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
அதனை தொடர்ந்து பரவாலயம் பகுதியில் உள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் இரயில் நிலையம் அருகில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கும் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியினரின் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தேசிய செயலாளர் கர்நாடக மாநில பொறுப்பாளர் கோபிநாத் பழனியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்போது வரை 27 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தனக்கு பதவி உயர்வு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே அவர்களுக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் பின் வரும் காலங்களில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை மேம்படுத்த பாடுபடுவேன் என்றும் வரும் காலங்களில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை ஓய்வு தனக்கு ஓய்வு இல்லை என்றும் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளை வழுப்படுத்தும் அரசாக செயல்படுகிறது என்றும் ஜாதி மதம் பேதமின்றி இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த கேள்விக்கு பேசுகையில் பெண் என்றால் தாய்மை உணர்வு இருக்க வேண்டும் ஆனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கான நிதி அமைச்சராக இதுவரை அவர் இருந்தது இல்லை என்று தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..