மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…
மயிலாடுதுறையில் மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய தொழிற்சங்கத்தின் திட்ட இணை செயலாளர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசாணை 6 மற்றும் 7-ஐ ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் பகுதி நேர பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மின்வாரிய உள்முகத்தேர்வில் கேங்மேனுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.