‘சென்னை கடற்கரைகள் மூடப்படும்’ மாநகராட்சி திடீர் அறிவிப்பு!

சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாளை பிரதமர் மோடி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி(நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்றும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் பிரதமரின் ஊரடங்கு உத்தரவு அழைப்பையடுத்து இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பாலவாக்கம், திருவான்மியூர் கடற்கரைகளும் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

What do you think?

‘தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி’ சடலத்தை பார்த்த கணவனும் தற்கொலை!

‘கொரோனா விழிப்புணர்விற்காக இலவசமாக வழங்கப்பட்ட சிக்கன்’ கடையை மூடிய வட்டாட்சியர்!