22 Total Views , 1 Views Today
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளாத தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியும், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தூதரக ரீதியில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் படகுகுள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களின் நலனை காக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.