கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்று மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம். திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகும் நிலையில் எப்போது அந்த திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் செப்டமர் 15 அண்ணா பிறந்தநாளன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை எனப் பெயரும் சூட்டினர். இதில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தமிழக அரசும் அறிவித்தது.
இந்நிலையில் அதற்கான பணிகளை தமிழக அரசு ஆயத்தமாக நடத்தி வந்த நிலையில், நேற்றே பணம் வைப்பு வைக்கும் பணியை தொடங்கினர். இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இதையும் படிக்க: சுயமரியாதையின் விடிவெள்ளி.. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய தலைமகன்… பிறந்த தினத்தை போற்றுவோம்..!