குழந்தையின் எலும்பு வலுவுற..!
குழந்தை களுக்கான எலும்பு வளர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று.., அவை மேலும் வலுவுற சில முக்கியமான உணவுகள் பற்றி பார்க்கலாம்.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிக முக்கியமான ஒன்று.., அவை மேலும் எலும்புகளை வலுவுற செய்யும்.
குழந்தைகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் கட்டாயம் கொடுக்க வேண்டும். தினமும் குழந்தைகளுக்கு பால், தயிர், மோர், மற்றும் வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் எலும்புகளின் தசையை வலிமையை அடைய செய்வதோடு, நன்கு வளரவும் உதவுகிறது.
தினமும் காலை ஒரு வேக வைத்த முட்டை மற்றும் இரவு ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொண்டால், அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்.
குழந்தைக்கு சீரான எலும்பு வளர்ச்சி வேண்டும் என்றால், மேற்கண்ட உணவுகளை தினமும் கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.