பேருந்தில் இருந்து முதியவரை தள்ளிவிட்ட நடத்துநர்.. நடவடிக்கை எடுத்த அதிகாரி..
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்வதற்காக சென்று கொண்டிருந்த பேருந்தில் முதியவர் ஒருவர் சாக்குமூட்டையுடன் ஏறியுள்ளார்.
இதனால் அந்த சாக்குமூட்டையை வண்டியில் ஏற்றக்கூடாது என்று கூறிய நடத்துநர், அந்த முதியவரை கீழே இறக்கி விட்டுள்ளார்.
அப்போது, அந்த முதியவரின் வேட்டி நழுவி தடுமாறியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நடத்துநர் தங்கராசு அந்த முதியவரின் தலையை அழுத்தி தள்ளிவிட்டுள்ளார் .
இதில் முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.மேலும் இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் நடத்துநரை உடனடியாக சன்ஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து முதியவரை தள்ளிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் தங்கராசையும், அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஓட்டுநர் முருகனையும் ஈரோடு போக்குவரத்து கழக மேலாளர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்