வார்த்தையை விட்ட அண்ணாமலை..!! இடைவிடாமல் அடிக்கும் எடப்பாடி..!!!
எடப்பாடி பழனிசாமியை அரைவேக்காடு என கூறி அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு அதிமுக கட்சியினர் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடத்தை பிடிக்கும் விதமாகவும், 2026ல் கூடுதல் சட்டசபை இடத்தை பிடிக்கும் விதமாகவும் எடப்பாடி உடன் சுமுகமாக செல்ல பாஜக முயன்று வந்தது. அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்தார்.
அதிமுகவை சமாதானம் செய்ய பாஜக சார்பாக கோயம்புத்தூரில் உள்ள ஆன்மீக குரு ஒருவர் பேச்சுவார்த்தையை செய்தார். இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் வழியாக அதிமுகவை மீண்டும் பாஜகவிற்குள் இழுக்கும் வேலைகள் நடந்தது.
திரைமறைவில் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் எதுவுமே பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று கடுமையாக மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது என பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்து இருக்கிறார்.
தேர்தல் களம் சூடு பிடித்த இந்நிலையில் அதிமுக – பாஜக இடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளது.