சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு மாநகராட்சி பத்தாயிரம் அபராதம் விதித்துள்ளது.
மதுரை மாநகராட்சி 72ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகர் நகர் அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணிஆய்வு நடைபெற்றது. அப்போது டெங்கு தடுப்புக்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்த காரணத்தினாலும், (டயர்கள், பழைய ட்ரம்கள்) மேலும் டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்பட்ட காரணத்தினாலும் சரவணா செல்வரத்தினம் மற்றும் தேவேந்திரன் ஒர்க்ஷாப் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது போன்று தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப் பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.