த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடக்கும் தேதி மற்றும் இடம் அறிவிப்பு..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.
அதன்படி சமீபத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி கட்சி பாடலையும் வெளியிட்டார். இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடி வெளியிட்டுக்கு பிறகு இரண்டு போர் யானைகள் குறித்து பெரும் சர்சையை கிளப்பியது.
இந்தநிலையில் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் விக்கிவாண்டி, மதுரை அல்லது திருச்சி ஆகிய 3 மாவட்டத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் தனது மீட்டிங்கை தொடங்க போவதாக தகவல்கள் அக்கட்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் அடுத்த மாதம் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் (23.09.2024 ) அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். தங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்