கடந்த 2015ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் அலிகாரை சேர்ந்த மைனர் பெண் காணாமல் போனார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தந்தை தன பிள்ளையை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பின்னர் அந்த மைனர் பெண் இறந்துவிட்டதாகவும் அவரை கொலை செய்தவர் இவர்தான் என்று கைது செய்யபட்டு ஒருவர் 7 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் இறந்ததாக கூறப்பட்ட அந்த பெண் தற்போது உயிருடன் இருக்கும் செய்தி தெரிந்துள்ளது.
2015ம் ஆண்டு உதிர்ப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் சிறுமி ஒருவர் திடீரெனெ காணாமல் போயுள்ளார். கோவிலுக்கு சென்ற அந்த பெண் வீடு திரும்பவே இல்லை இதனால் பதற்றம் அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அலிகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து விசாரித்து வந்த காவல் துறைக்கு நீண்ட நாள் கழித்து ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கபட்டுள்ளது. தொலைந்து போன மைனர் பெண் தான் கொலை செய்யபட்டுள்ளார் அவரை கொலை செய்தது விஷ்ணு என்ற நபரை காவல்துறை கைது செய்து வழக்கை முடித்துள்ளது.
இதனால் விஷ்ணு என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த குற்றத்தை அவரின் தாய் ஏற்றுக்கொள்ளாமல் காவல்துறை,நீதிமன்றம் என்று சென்றுளார் இருப்பினும் ஏதும் பயனளிக்காததால் அவரே விசாரிக்கவும் ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காணாமல் போகி இறந்ததாக தெரிவிக்கபட்ட பெண் திருமணம் செய்து ஹரிதாஸ் என்ற பகுதியில், தனது கணவருடன் அவர்களின் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்துள்ளது தெரிவந்துள்ளது. பெற்றோருக்கு பயந்து காதலை வெளிய சொல்ல முடியாமல் இருந்த அந்த பெண் 17 வயதில் அவரின் காதலுருடன் சென்றுள்ளார். இது தெரியாத அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலயத்தி புகார் அளித்துள்ளனர். இதனால் விஷ்ணு என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை வாசகம் இருந்துள்ளார். அந்த பெண்ணை கண்டுபிடித்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தததில் இவர்தான் காணாமல் போன பெண் என்று நீதிமன்றம் தெரிவந்துள்ளது. பின்னர் அந்த பெண் கைதும் செய்யப்பட்டுள்ளார் . இதனால் அந்த வழக்கை வாபஸ் பெற்று விஷ்ணு மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் அந்த பெண்ணின் உறவினர்கள் சமரச பேச்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.