திருட சென்ற இடத்தில் 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சேஷசலம் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சைதாப்பேட்டை கோட்டமேடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) என்ற திருடன் திருடிவிட்டு தப்பிக்கும் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு.
மூன்றாவது மாடியில் வசித்து வந்த மோகன்ராஜ் என்பவர் நேற்று இரவு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளார். அப்போது திருடன் மணிகண்டன் வீட்டுக்குள் சென்று அவரது மொபைல் போனை திருடியுள்ளார். அப்போது திடீரென விழித்த மோகன்ராஜ் திருடன், திருடன் என கத்திக்கொண்டே திருடனை துரத்தியுள்ளார்.
இதனால், செல்போனை தூக்கி எறிந்து விட்டு ஓடிய திருடன் மணிகண்டன் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
விழுந்தவர் கீழே இருந்த மரத்தில் சிக்கிக்கொண்டார்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து, அடிபட்டு மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த திருடன் மணிகண்டனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த திருடன் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.