வயநாட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! NRSC அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அப்டேட்..!
கேரளாவில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் வயநாடு சூரல் மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக சூரல் மலை மற்றும் முண்டகை பகுதியில் மீட்புப்பணி நடந்து வருகிறது.
அவ்வப்போது ஏற்படும் மிக மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளின் அவ்வப்போது இடையூறு ஏற்படுவதால் மீட்பு பணிகளுக்கு உதவியாக சமூக ஆர்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். இதுவரை, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் 240 பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், கேரளா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் விடப்பட்டுள்ளது. மேலும், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சூர், கண்ணூர், வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பேரிடர் பகுதி மற்றும் நிலச்சரிவில் சிக்கிய குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர் மற்றும் விம்ஸ் மருத்துவமனையை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.
தற்போது, வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தேசிய தொலைநிலை உணர்தல் மையம் (National Remote Sensing Centre), இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலச்சரிவு அபாயம் குறித்த தகவல்களை வெளியிட்ட NRSC அமைப்பு, இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..