விஜய் ஒரு தற்குறி..! அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டி..!
“தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர்…”
“திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும்…”
“விஜயின் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்…”
அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கும் முதல்வரை பார்த்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற கூட்டம் ஒன்று உள்ளது.
பாலியல் வன்கொடுமை நடந்தால் அதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கை பதிவு செய்வதுடன் நிறுத்தி விடாமல் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறுபவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும்.
திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணம் இதில் குறைவு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும்.
தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பேசியது
மக்கள் வாழ்க்கையில் பார்க்காத பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது…
ஒரு நாள் கூட நிற்கமால் மக்களுக்காக உழைத்து வருகிறார் துணை முதலமைச்சர்….
தமிழ்நாட்டில் மக்கள் சந்தோசமாக உள்ளனர், ஒன்றிய அரசு தமிழ்நாடு கேட்டுக்கும் நிதியை கொடுத்தால் நன்றாக இருக்கும்…
கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவை காலியாக வைத்து விட்டு சென்றனர்…
ஒன்றிய அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் சொன்ன திட்டங்களை மட்டும் அல்ல சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி இந்தியாவின் நம்பர் முதலமைச்சராகவும், நம்பர் ஒன் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது….
பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டு மக்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்…
கருவறை முதல் கல்லறை வரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களால் நாடு சுபிட்சமாக உள்ளது…
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சில அதிமேதாவையாக தற்குறியாக களத்தில் வராதவர்கள் பேசுகிறார்கள் ஆனால் 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்…