சாலையில் அறுந்த நிலையில் இருந்த மின்கம்பி… ஓட்டுநரின் துரித செயலால் தப்பிய பயணிகள்..!
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று காலை (ஆக.19) திருப்பரங்குன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பசுமலை, மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பி தாழ்வாக சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் அந்தக் கம்பி அறுந்து விழுந்தது. இதனை அறிந்த பேருந்து ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கும் மாறு கூறியதை தொடர்ந்து பயணிகளும் வேகமாக பேருந்தில் இருந்தி அலறி அடித்து கொண்டு இறங்கி ஓடினர். ஓட்டுநர் சுதாரித்து கொண்டு பேருந்தை நிறுத்தியதால் அசம்பாவிதங்கள் எதும் நிகழமால் பயணி உயிர் தப்பினர்.
இது தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தை தொடர்ந்து அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர்.
-பவானி கார்த்திக்