அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை..!! முத்தரசன் கண்டனம்..!!
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் சண்முக புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்க துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டு வருகிறது என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால்கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அமலாக்க துறை திமுக வை எதுவும் செய்ய முடியாது.., திமுகவை தப்பாக காட்ட பாஜக செயல்பட்டு வருகிறது. அமலாக்க துறையினரின் சோதனை மூலம் மக்களின் கோபத்திற்கு ஒன்றிய பாஜக அரசு ஆளாகிவிடும்.
விலைவாசி உயர்வு பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.., என்று குற்ற சாட்டுகளை முன் வைத்துள்ளார், அமலாக்க துறை சோதனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர் காட்சிகளை பல வீன படுத்தி விட்டால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என பாஜக நினைத்து கொண்டிருக்கிறது.
பெங்களுருவில் நடைபெறும் எதிர் கட்சி கூட்டம் நடைபெறும் இந்த சமையத்தில் அமலாக்க துறையினர்.., சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காட்சிகள் அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் அமலாக்க ஒன்றிய அரசை தவறாக பயன் படுத்தி வருகிறது. என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.