கல்லூரி மாணவியின் திடீர் முடிவால் குழம்பி போன குடும்பத்தினர்..!
சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19). பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்தார்.
இந்தநிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார்.
நேற்று இரவு நித்தியாவின் தாய் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நித்யா அழைப்பை ஏற்காததால் அருகில் உள்ள அவரது சகோதரியிடம் நித்யாவை பார்க்கும்படி கூறினார். சகோதரியும் அவரது வீட்டிற்கு சென்று வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் அச்சமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது நித்தியா மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்