வெங்கல் ராவ்க்கு உதவி கரம் நீட்டிய பிரபல முன்னனி நடிகர்… குவியும் பாராட்டுகள்..!
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் வெங்கல் ராவ். அதன்பிறகு, காமெடியில் கவனம் செலுத்த துவங்கிய இவர், வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
அப்படி வடிவேலு உடன் காமெடி காட்சிகளில் நடித்து பேமஸ் ஆன வெங்கல் ராவ் எனற பெயர் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இவர் நடித்த காமெடி காட்சிகளை சொன்னால் உடனே தெரிந்துவிடும்.
குறிப்பாக கந்தசாமி படத்தில் வடிவேலு உடன் தேங்காய் பேரம் பேசும் காட்சி தொடங்கி சீனா தானா 007 படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடுவேன் என மிரட்டும் கதாபாத்திரம் வரை இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்து ஹிட்டான காமெடி காட்சிகள் ஏராளம்.
அப்படி காமெடி காட்சிகளால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வெங்கல் ராவ் சினிமாவில் இருந்து விலகி தற்போது விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர் சில் தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தனது ஒரு கை, கால் செயிழந்து போயுள்ளது என்றும், தனக்கு சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்கள் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வந்த நிலையில் கமென்ஸ்களில் வடிவேலு அவருக்கு உதவ வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் வடிவேலுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. வழக்கம் போல் அமைதியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிம்பு இந்த வீடியோ பார்த்த உடனே வெங்கல் ராவிற்கு உதவி இருக்கிறார்.
அதவாது அவருடைய மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார். சிம்பு செய்த இந்த உதவியால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்