கிணற்றில் விழுந்த விவாசாயி.. சோகத்தில் அப்பகுதியினர்..!
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் முத்தூரைச் சோ்ந்தவா் வரதராஜ் (45). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, அங்கிருந்த கிணற்றில் எதிா்பாராதவிதமாக விழுந்துள்ளாா்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே கிணற்றில் இறங்கி வரதராஜை மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். த்இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
எதிர்பாரத விதமாக விவாசாயி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்