பெற்ற மகள் வாழ்க்கையை சீரழித்த தந்தை..! துணைபோன அண்ணன் தம்பி..!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புகழ்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் மாதந்தோறும் மருத்துவர்களால் மாணவர்களுக்கு கவுன்சலிங் நடத்துவது வழக்கம் அந்த வகையில் நேற்று நடந்த கவுன்சலிங்கில் 13 வயது சிறுமி ஒருவரிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..
அதில் சிறுமி கூறியதாவது.. வீட்டில் தனது தாய் இல்லாதபோது பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்… வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது தம்பியிடம் இதை பற்றி சொல்லி தம்பி மற்றும் அவரது மகன் 3 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அதை வீடியோவாக எடுத்து வெளியில் சொன்னால் அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் எனவும் கூறியுள்ளனர்.. இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்லாமல் கடந்த 7 மாதங்களாக இந்த சித்திரவதைகளை அனுபவித்து வந்துள்ளார்…
சிறுமியின் கொடுமைகளை கேட்ட பள்ளி நிர்வாகம்.., போலீசில் புகார் அளித்து சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பா, அண்ணன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ