வீட்டில் செல்வம் செழிக்க இந்த உயிரினங்கள் வர வேண்டும்..!
வீட்டிற்குள் வரும் சிலவகை விலங்குகளை வைத்து நம் வீட்டில் அதிஷ்டமானது நம்பப்படுகிறது. அந்தவகையில் வீட்டிற்குள் வரும் சில விலங்குகளின் அதிஷ்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிஷ்டம் தரும் விலங்குகள்:
கிளி: கிளியானது குபேரனுடன் தொடர்புடையதாகும். வீட்டில் கிளி வரும்போது செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஆமை: ஆமையானது விஷ்ணுவின் அவதாரமாகும். இது வீட்டிற்குள் வரும்போது நேர்மறையான ஆற்றலை தந்து லட்சுமி தேவியை மகிழ்விக்குமாம்.
கருப்பு எறும்பு: கருப்பு எறும்பானது நல்ல அதிஷ்டத்தின் அடையாளமாகும். வீட்டில் கருப்பு எறும்புகள் அதிக அளவில் சுற்றி திரிந்தால் அந்த வீட்டில் செல்வம் பெருமாம்.
பூனை: சிலவகை கலாச்சாரத்தில் பூனை அதிஷ்டம் தரும் விலங்காக நம்பப்படுகிறது. குறிப்பாக செல்வம் மற்றும் செழிப்பை தருவதாக சொல்லப்படுகிறது.
தவளை: சீனா மற்றும் இந்திய வாஸ்து முறைகளில் தவளைக்கு என தனி இடமே உண்டு. ஒருவரின் வீட்டிற்குள் தவளை வருவது நல்ல அதிஷ்டமாக கருதப்படுகிறது.
கெட்ட அதிஷ்டம் என கருதப்படும் விலங்கு:
சிவப்பு எறும்பு: சிவப்பு எறும்பு பொதுவாக கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது. வீட்டில் சிவப்பு எறும்பு திரிந்தால் அந்த வீட்டின் மகிழ்ச்சி, செழிப்பு, பணம், நிம்மதி, செல்வம் ஆகியவை குறையும் என நம்பப்படுகிறது.
மேலே குறிப்பிட்டது போல சிலவகை விலங்குகள் வீட்டிற்குள் வருவது என்பது அந்தெந்த நம்பிக்கை மட்டுமே, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனில் நல்ல செயல், எண்ணம் மற்றும் உழைப்பு மட்டுமே காரணமாக அமையும்.