கொடைக்கானலில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான நிதி! திரும்ப அனுப்பப்பட்டதா..?
கொடைக்கானலில் சூழல் சுற்றுலா மையம் அமைப்பதற்கான நிதியை மேல்மலை விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் பகுதியில் மாநில சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ், சுற்றுலா மையம் அமைக்க ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில் மேல்மலை மன்னவனூர் பகுதியில் சூழல் சுற்றுலா மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தில் சுற்றுலா மையம் அமைக்க கூடாது என்று சுற்றியுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நிதி திரும்ப அனுப்பப்பட்டது.
வேறு பிரச்சனை இல்லாத இடம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் கூடுதல் நிதியுடன் சுற்றுலா மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.