’விளையாட்டு வினையாக முடிந்தது’.. ரீல்ஸ் ஆசையால் ஆபத்தை உணராத சிறுவர்கள்..!
ரீல்ஸ் மோகத்தில் இன்றைய உலகம் மூழ்கியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். வெறும் லைக்ஸ் மற்றும் பாலோவர்ஸ்காக எந்த எல்லைக்கு வேண்டுமானலும் செல்கின்றனர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை. அதனால் ஏற்படும் விளைவுகளை கண்டு கவலை கொள்வதில்லை. ஒவ்வொரு நாளும் டிவி முதல் பேப்பர் வரை ரீல்ஸ் மோகத்தால் எதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருப்பது நாம் காதுக்கு வந்து கொண்டு தான் உள்ளது.
அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கரண் (11). இவர் தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளான். தற்கொலை செய்து கொள்வது போல் தான் நடிக்க, தனது நண்பர்களை அதனை வீடியோவாக எடுக்கும்படி கோரியுள்ளார்.
இதனை அடுத்து அதற்காக மரத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொள்வதுபோல் அந்த சிறுவன் நடிக்க அதனை அவரது சக நண்பர்கள் வீடியோவாக எடுத்தனர்.
ஆபத்தை உணராமல் சிறுவன் நடித்து கொண்டிருந்தான். ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக சிறுவனின் கழுத்து இறுக தொடங்கியபோது அலறி துடித்து உள்ளான். அதனை அறியாத அவரது நண்பர்களோ தத்ரூபமாக நடிப்பதாக நினைத்து கொண்டு தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தனர்.
சிறிது நேரத்தில் சிறுவன் மயக்கம் அடைந்ததால் அவரது நண்பர்கள் ஓடி சென்று அருகில் உள்ளவர்களை அழைத்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் கரணின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத்தனர்.
இதையடுத்து தகவறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்விளைவுகளை அறியாமல் செய்த செயலால் சிறுவன் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்