ஏடிஎம்-ல் ஆட்டைய போட்ட கும்பல்..! போலீஸ் போட்ட பிளான்..!
ஆந்திர மாநிலம் சித்தூரில் மாவட்டம் குடிபாலாவில் எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றபோது அங்கு மிஷின் உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்த கொள்ளையர்கள் மிஷினை உடைத்து
அதில் இருந்து 25 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோப்ப நாய்களை வரவழைத்து தடவியியல் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்து தமிழக எல்லையான வேலூர் அருகே என்பதால் கொள்ளையடித்த கும்பல் வேலூர் தப்பி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த மாவட்ட போலீசாருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த திருட்டு வட மாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..