கருவில் உள்ள சிசு கண்டறிந்து சொல்லும் கும்பல்..! வலைவீசிய போலீஸ்..! மர்ம கும்பல் சிக்கியது எப்படி..?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து ஆணா பெண்ணா என தெரிவிக்கும் கும்பல் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட சுகாதார துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்தனர்.
ஆளில்லா வீட்டில் பரிசோதனை செய்த இந்த கும்பல் தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், நடராஜன், சின்னராஜ், மற்றும் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரை சேர்ந்த லதா ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். இதில் முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததில், கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில் பிடிபட்ட கும்பலுக்கு சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க குண்டாஸ் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..