நரிக்குறவர் இன மக்களுக்கு மிரட்டல் விட்ட கும்பல்..!! வட்டசியர் கொடுத்த விளக்கம்..!
ஊசிமணி பாசிமணி விற்று பிழைப்பை நடத்தும் நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு கொடுத்த பட்டா இடத்தை அபகரிக்க முயலும் 4 பேர் கொண்ட கும்பல்தங்களுக்கான இடத்தை இது போன்ற கும்பல் அடிக்கடி கொடுக்கக் கோரி மிரட்டுவதாக காட்பாடி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார். தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளதாக காட்பாடி வட்டாட்சியர் விளக்கம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி சுல்தான்நகர் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட நரிக்குறவ என மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பலமுறை தங்களுக்கு நிரந்தரமாக வசிக்க பட்டா வழங்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அங்கிருந்த 65 குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அவர்களில் சுமார் 28 பேருக்கு அந்த பட்டா இடங்களில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது..
இந்த சூழ்நிலையில் அங்கு நரிக்குறவர் இன மக்கள் வீடு கட்ட துவங்கியுள்ளனர் இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சண்முகம் சுனில் குமார் சரத் அன்பு என்கின்ற நான்கு பேர் இந்தப் பட்டா செல்லாது இது எங்களுக்கு சொந்தமான இடம் இங்கு வீடெல்லாம் கட்டக்கூடாது எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்..
இதனையடுத்து நரிக்குறவர் இன மக்கள் தங்களை மிரட்டும் இந்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.. அங்கிருந்த அப்பொழுது நாங்கள் பணியில் இருந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்..
இதுகுறித்து நரிக்குறவர் இன மக்கள் கூறுகையில்அங்கு வந்து தங்களை மிரட்டும் நபர்கள் இது போலியான பட்டா என்று கூறுகின்றனர் அப்போது அரசு கொடுக்க பட்டாவும் டுபாக்கூர் அமைச்சரும் டுபாக்கூரா என்று ஆவேசம் பொங்க பேசினர் நாங்கள் எங்கே போவோம் எங்களுக்கு யார் உள்ளார்கள் ஊசிமணி பாசிமணி விற்று எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம் தங்களுக்கான இடத்தை உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு மீட்டு தர வேண்டும் என இரு கைகளை கூப்பி கோரிக்கை விடுத்தனர்..
இந்த சம்பவம் குறித்து காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் விளக்கம்நரிக்குறவர் இன மக்களின் பட்டா இடத்தை அபகரிக்க முயலும் நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி காட்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் பழனிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் புகார் மனு அளித்துள்ளதாகவும் மேலும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்ஊசிமணி பாசிமணி விற்று தங்களின் பிழைப்பை நடத்தி வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசு முன்வந்து பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கியுள்ளது.
இதுபோன்று சமூகவிரோதிகளின் செயலால் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை