தனிமைப்படுத்திக்கொண்ட ஜெர்மன் அதிபர்!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்

கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்களும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய மருத்துவர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

What do you think?

மார்ச் 22 சுய ஊரடங்கு உத்தரவின்படி நீங்கள் வீட்டில் இருந்தீர்களா?

11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!