நாய் கடித்த சிறுமிக்கு நோய் தொற்று உறுதி..!! ராதாகிருஷ்ணன் கொடுத்த அப்டேட்..!!
தமிழ்நாட்டில் மட்டும் பல வருடங்களாகவே நாய்க்கடி சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.., வளர்ப்பு நாய்கள் மட்டுமின்றி இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6 கோடி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது.
சென்னை கொடூரம் :
இந்நிலையில் கடந்த மே 6ம் தேதி அன்று ஆயிரம் விளக்கு பள்ளி சாலையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை இரண்டு ராட்வெய்லர் நாய்கள் சிறுமியை கடித்து குதறியுள்ளது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆயிரம்விளக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
சிறுமி மருத்துவனமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..,
ஜாமீன் :
இந்நிலையில் சிறுமியின் இந்த அவல நிலைக்கு காரணமான 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்..
உயர்நீதிமன்றம் உத்தரவு :
இனி வரும் நாட்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்து அவற்றிக்கு நோய்கள் ஏதும் இல்லை என அறிந்த பிறகு தான் வளர்க்க அனுமதிக்கப்படும் என விலங்குங்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது..
நாய்வளர்க்க தடை :
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் போயர் போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய அப்டேட் :
நாய் கடியால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ரிப்பன் கட்டிட சந்திப்பு சிக்னலில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல் அமைத்தல் பணியினைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்கள் பதிவு செய்யும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், கோடை வெப்பம் காரணமாக போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பச்சை நிற பந்தல் மழைக்காலங்களில் பைபர் பந்தல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்..