திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினரின் மகள்(10) அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்
இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது 14 வயது சிறுவர்கள் 2 பேர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதேபோன்று முகமது தாலித் (55) என்பவரும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுவர்கள் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடன் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்