கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட பெண்.. புகாரை ஏற்காத பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட்..!
சமீப காலங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது மாதிரியான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
அந்தவகையில், தஞ்சை மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தது. ஆனால் இந்த புகாரை ஏற்காத எஸ்.ஐ. அந்த இளம்பெண்ணை அலட்ச்சிய படுத்தியுள்ளர். அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பல ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த அநீதியை செய்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்ற நோக்கத்தில் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரை ஏற்காத எஸ்.ஐ அப்பெண்ணை அலட்ச்சிய படுத்தியுள்ளார்.
இந்த விவாகரம் காவல்துறை டிஜிபியின் கவனத்திற்கு சென்றது. அதன் அடிப்படையில் அந்த பெண் எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.
பணியை சரியாக செய்யாத சில காவல்துறையினருக்கு டிஜிபியின் இந்த உத்தரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்