காதலித்து ஏமாற்றிய காதலி… வித்தியாசமான முறையில் பழிவாங்கிய சிறுவன்..!
சென்னை பெரியமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி தினமும் டியூசன் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது மாணவிக்கும் 17 வயது சிறுவன் ஒருவனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதல் விவகாரம் மாணவியில் பெற்றோர்க்கு தெரியவந்ததால் இவர்களின் காதலை பிரித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கல்லூரி மாணவியிடம் சிறுவன் பேச முயன்ற போது, மாணவி சிறுவனைக் காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், காதலித்து ஏமாற்றி சென்ற தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, கல்லூரி மாணவியை பழிவாங்க, அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கல்லூரி மாணவியின் வீட்டு முகவரிக்கு அனுப்பியுள்ளார்.
இதனால், பல டெலிவரி ஊழியர்கள், மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்தனர். குறிப்பாக கல்லூரி பெண்ணுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுடன் சண்டை போடுவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களுக்கும் சிறுவன் பணம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆர்டர் செய்யவில்லை என்று டெலிவரி ஊழியர்களிடம் கூறிய போதும், டெலிவரி ஊழியர்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை செலுத்தாமல் கோபத்தில் சண்டையிட்டனர். மூன்று நாட்களாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து சிறுவன் மாணவியின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஆன்லைன் டெலிவரி மூலம் கஷ்டத்தில் இருந்த கல்லூரி மாணவியை மேலும் சித்ரவதை செய்ய ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை கார் புக்கிங் ஆப்ஸ் மூலம் 77 முறை வாகனங்களை புக் செய்து கல்லூரி மாணவியின் முகவரிக்கு அனுப்பி மன உளைச்சல் கொடுத்துள்ளார்.
மேலும், வேதனைக்குரியதாக கல்லூரி மாணவியின் தந்தை இறந்ததாக புகைப்படங்களை சித்தரித்து டெலிகிராம் மூலம் பதிவிட்டுள்ளார். சிறுவனின் கீழ்தனமான செயலால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவியின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் ஆன்லைனில் ஆர்டர் செய்த விண்ணப்பங்களில் பயன்படுத்திய செல்போன் எண், மின்னஞ்சல் மூலம் ஆய்வு செய்து சிறுவன் இருக்கும் இடத்திற்கு சென்று கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கல்லூரி மாணவி ஏமாற்றியதால் பழிவாங்க இவ்வாறு செய்தது தெரிய வந்தது. மேலும் சிறுவனிடம் இருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு வைஃபை ரூட்டர்கள் போன்ற ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காதலி ஏமற்றியதால் வித்யாசமான முறையில் சிறுவன் பழிவாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்