கேட்பாரின்றி கிடந்த அரசு பேருந்து… மாமியார் வீட்டிற்கு எடுத்து சென்ற இளைஞர்..
ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தரகையா. ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்ப்ய் அவரது மனைவி தனது தாய் விட்டிற்கு சென்ற நிலையில், தன் மனைவியை பார்க்க தாரகையா முடிவு செய்தார். ஆனால் மனைவியை பார்க்க போக்குவரத்து செலவுக்கு பணமில்லததால் பேருந்து நிலையத்தில் கேட்பாரின்றி அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அதோடு பேருந்தில் சாவியும் இருந்ததால் தாரகையா அந்த பேருந்தை இயக்கி தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து காலையில் வந்து பார்த்த போது திடீரென மாயமானதால் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையத்தில் பேருந்து ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்தை கடத்தியர் குறித்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து தாரகையாவை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ’மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு செல்ல் பேருந்து நிலையத்திற்கு வந்த போது பேருந்தில் பயணிக்க பணம் இல்லததால் பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பேருந்தை எடுத்து சென்றேன்’. ‘ என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு திகைப்படைந்த போலீசார் அவர் கூறும் தகவல்கள் உண்மைதானா என தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் அவரிடம் இருந்து அரசு பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் தரகையாவை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
-பவானி கார்த்திக்