அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் உத்தரவை நிறுத்திய ஆளுநர்..! முதலமைச்சருக்கு வந்த மற்றொரு கடிதம்..!!
பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப் பட்டிருந்தார். மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். ஊழல் காரணமாக அவர் மீது ஏற்பட்ட புகார் காரணமாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.
அவர் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. என்று அமைச்சரவையில் விசாரணை தொடர்ந்தால் பாதிப்புகள் ஏற்படும். என்று காரணங்கள் சொல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக தமிழக ஆளுநர் கூறினார்.
இதனை தொடர்ந்து ஆளுநரின் இந்த உத்தரவுக்கு கடுமையான கண்டனங்கள் திமுக சார்பில் சிலர் கூட்டணி நடத்தி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலைமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் முந்தைய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மேலும் ஆளுநரின் முந்தையை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற ஆளுநர் முடிவு செய்துள்ளார். என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆளுநர் ரவி, அட்டர்ஜி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதால்.., செந்தில் பாலாஜியை நீக்கி வைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதுவரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாகவும்.., தகவல் வெளியாகியுள்ளது.