மகன் இறந்த துக்கம்.. உயிரை மாய்த்து கொண்ட தாய்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவன் டோனி என்ற 12 வயது சிறுவன். இவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்துள்ளான்.
இந்நிலையில், டோனி பள்ளியில் சரியாக படிக்காததால், அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன், கடந்த 26- ம் தேதி அன்று தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மகன் உயிரிழந்ததால், அவனது பெற்றோரும் கடும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், இன்று உச்சகட்ட சோகத்திற்கு சென்ற டோனியின் தாய் மீனாட்சி, மகன் உயிரிழந்த அதே தேதியான இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.
மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை அளித்துள்ளது.
-பவானி கார்த்திக்