பார்வை இல்லை என்றாலும் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹெலன் கில்லர்..!!
உலகில் ஒரு சிலர் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருப்பார்கள்.., என்றாவது ஒரு நாள் உலகை விட்டு செல்லதானே போகிறோம்.., அதுவரை ஜாலியாக வாழ்ந்து விட்டு செல்வோம். என்று வாழ்வர்கள்.., ஆனால் ஒரு சிலர் மட்டுமே வாழும் பொழுதும் உலகை விட்டு சென்ற பின்னும் பெயரில் மட்டுமல்லது மனதிலும் வாழ வேண்டும். என்று நினைப்பார்கள்..
உதாரணமாக.. காந்தியடிகள், அன்னை தெரசா, ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.. போன்றோர்கள்..
இவர்களை போலவே சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் தான் “ஹெலன் கில்லர்“. ஹெலன் கில்லரின் பிறந்த நாள் ஜூன் 27, 1880.
பிறக்கும் பொழுது மற்ற குழந்தையை போலவே.., ஆரோக்கியமாக பிறந்த இவர். இரண்டு வயது குழந்தையாக இருக்கும் பொழுது மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்.
இதனால் ஹெலன் பார்வை பரி போனது, செவி கேட்காமல் போய் விட்டது. தகவல் களை தொடு உணர்வின் மூலம் படித்துள்ளார்.
இருந்து அவரால் அதை கற்றுக்கொள்ள முடியவில்லை, அந்த நேரத்தில் தான் ஹெலனுக்கு உதவியாக ஆசிரியர் அன்னி என்பவர் வந்து சேர்ந்துள்ளார்.
ஹெலனுக்கு பிரெய்லி எழுத்துக்களை அறிமுக படுத்தியுள்ளார். எழுதுவதற்கு வசதியாக இருப்பதற்காக எழுத்து டைப் ரைட்டர் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். கண்பார்வை தெரியாது ஹெலனுக்கு.., ஆசிரியர் அன்னி எல்லாமுமாக இருந்துள்ளார்.
பின் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ படிப்பும் முடித்துள்ளார். அதன் பின் ஹெலன் பல இடங்களுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அந்த சொற்பொழிவு ஆற்றியதன் மூலம் வந்த பணத்தில் கண் பார்வையாற்றோர் நலனுக்காக கொடுத்துள்ளார். ஹெலன் கில்லரை கெளரவிக்கும் விதமாக “டெலிவரன்ஸ்” என்ற ஹாலிவுட் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பின் அதன் மூலம் உலகெங்கும்.. ஹெலன் கில்லர் புகழ் பரவியது மட்டுமின்றி.., அவர் அனைவருக்கும் உதவி செய்யவும் ஆரமித்தார். அதன் பின் அவரை பற்றி பல பள்ளிகளில் பாடங்கள் நடத்தவும் ஆரமிதுள்ளனர். இவரின் இந்த செயல்களை கண்டு பலரும் இவரை ரோல் மாடலாக வைத்துள்ளனர்.
இப்படி பல சாதனைகள் மற்றும் பலருக்கும் உதவியாக இருந்த ஹெலன் கில்லர் இந்த உலகை விட்டு பிரிந்து சென்ற நாள் ஜூன் 1, 1968.
ஜூலை 5 இன்று தான் ஹெலன் கில்லர் திரைப்படம் வெளியாகிய நாள். படத்தின் பெயர் “The Miracle Worker“. 1962ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வெளியானது.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..