பயத்திற்கே பயம் காட்டிய நாயகன்..! பயந்து போன அந்த நபர் யார்..?
2006 காலகட்டத்தில் கிரிக்கெட் உலகத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாரா-வை பார்த்தால் கிரிக்கெட் உலக பந்து வீச்சாளர்கள் ஆகட்டும் எந்த கிரிக்கெட் அணியாகட்டும் ஒரு வித பயத்திலேயே இருப்பார்கள்.
அவர் பேட்டிங் வந்தால் ரன் மழையும் இருக்கும், ஆட்டமிழக்கவும் மாட்டார் பந்து வீச்சாளர்களின் வியூகம் எல்லாம் அவரிடம் எடுபடாது. அவரே எதாவது தப்பு செஞ்சு ஆட்டமிழப்பார் அது பந்து வீச்சாளருக்கும் எதிரணிக்கும் பெரும் நிம்மதியா இருக்கும்…
அப்படிபட்டவரே தல தோனியிடம் போய் நீங்களே டிக்ளேர் செஞ்சிடுங்கன்னு. சொன்ன விஷயமெல்லாம் இப்ப இருக்கிற RCB, MI, KKR ரசிகர்களுக்கும், அவரை விமர்சிக்கிறவங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை…
2006 -ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 500 ரன்னுக்கும் மேலாக நம் இந்திய அணி ஆடிக்கொண்டு இருக்கும்.
அச்சமயத்தில் டெஸ்ட் போட்டியை 6 சிக்ஸர், 4 பவுண்டரி என விலாசி ஒரு நாள் போட்டி போல விளையாடி கொண்டிருப்பார். தல தோனி, அச்சமயத்தில் பவுண்டரி பக்கத்தில் கேட்ச் கொடுக்க அதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிடித்து விடுவார்.
எதிரணி கேப்டன் பிரைன் லாராவிற்கோ பயங்கர சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார், மூன்றாவது நடுவர் பரிசோதித்ததில் கேட்ச் பிடித்த வீரர் பவுண்டரி லைனை தொட்டிருப்பார் அதனால் தோனி அவுட் இல்லை 6 ரன் என அறிவிக்கப்படும்…
இதனை சற்றும் எதிர்பார்க்காத வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா.., அந்த அறிவிப்புக்கு பின் இனி என்னால் தோனிக்கு பந்து வீச முடியாது. என கூறி நடுவர்களிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நடுவர்களோ ஒன்றும் செய்ய இயலாது என கைவிரிக்க லாரா நேராக தோனியிடமே சென்று இந்த இன்னிங்ஸை முடித்துக் கொள்ளுங்கள் எங்களால் இனி பந்து வீச முடியாது என கேட்பார்.
இதையெல்லாம் பார்த்த இந்திய அணியின் அப்போதைய கேப்டன் டிராவிட் தோனிக்கு சைகை செய்து இன்னி்ங்சை முடிக்க சொல்வார் தோனியும் வெளியே வருவார்…
டெஸ்ட் போட்டியாகட்டும், ஒரு நாள் போட்டியாகட்டும் லாரா பேட்டிங் வந்தால் எதிரணி எந்த அணியாக இருந்தாலும், ஒரு வித பயத்திலேயே பந்து வீசும், லாரா 400 ரன்கள் எடுத்த டெஸ்ட் மேட்சில் கூட எதிரணி அவரிடம் பேட்டிங் செய்வதை முடிக்க வலியுறுத்தியது. இல்லை
ஆனால் 400 ஆடி எதிரணியினரை சோர்வடைய செய்த லாராவையே தன்னிடம் ஆட்டத்தை முடிக்கும் படி கேட்க வைத்தவர் தல தோனி… “மொத்தத்தில் தல தோனி பயத்திற்கே பயத்தை காட்டியவர்”… இன்று வரை அவரை கண்டால் எதிர் அணிக்கு பயம் அதிகரிக்கும்..
-வீர பெருமாள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..