விண்வெளியில் தவிக்கும் வீராங்கனை..! வெளியான வீடியோ..! நாசா எடுத்த முடிவு..?
இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை “சுனிதா வில்லியம்ஸ்” வயது 58 மற்றொரு வீராங்கனையான “புட்ச் வில்மோர்” ஆகிய இருவரும் கடந்த மாதம் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்..
விண்வெளி மையத்தில் வீராங்கனைகள் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த மாதம் ஜூலை 22ம் தேதி இந்தியா திரும்ப இருந்த வீராங்கனைகள் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தற்போது இந்தியா திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.. அதே சமயம் அவர்கள் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் அவர்கள் இந்தியா திருப்பி அழைத்து வரப்படுவார்கள் என நாசாவின் வணிககுழு திட்ட இயக்குனர் ஸ்டீவ் ஸ்டிக் தெரிவித்துள்ளார்.
மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்ஸ்மோர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.., அதில் அவர்கள் கூறியதாவது, “நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்., எங்களை எப்படியாவது பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து சென்று அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் படி அவர்கள் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ