11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என்று கூறியது.

இதனையடுத்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்விற்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வழக்கமாக 10 மணிக்கு தொடங்கும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

What do you think?

தனிமைப்படுத்திக்கொண்ட ஜெர்மன் அதிபர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 425 ஆக அதிகரிப்பு!